ஹிட்லரை போல் நடித்த அமெரிக்கர் மீது தாக்குதல்: ஜேர்மனியில் தொடரும் அத்துமீறல்

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனியில் ஹிட்லரின் நாசிச வணக்கம் வைத்த அமெரிக்கர் ஒருவரை சரமாரியாக தாக்கிய நபரை அந்நாட்டு பொலிசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் தற்போது ஜேர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

நேற்று டிரெஸ்டன் நகருக்கு சென்ற அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, எதிரே வந்த நபரை பார்த்து ஹிட்லர் போல் நாசிச வணக்கத்தை வைத்துள்ளார்.

அமெரிக்கரின் அத்துமீறலை கண்டு ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லரின் நாசிச வணக்கத்தை வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

இவ்விவகாரம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்கரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அமெரிக்கரை தாக்கிய நபரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 5-ம் திகதி பெர்லின் நகரில் உள்ள பொது இடத்தில் சீனாவை சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் ஹிட்லரின் நாசிச வணக்கத்தை வைப்பது போல் புகைப்படம் எடுத்ததால் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது மீண்டும் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் இதே குற்றத்திற்காக பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers