90 நோயாளிகளை கொன்றது ஏன்? செவிலியருடன் சிறையிலிருந்த சக கைதி வாக்குமூலம்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 90 நோயாளிகளுக்கு அதிக மருந்துகளை கொடுத்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் செவிலியருடன் சிறையிலிருந்த சக கைதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

40 வயதான Niels H என்ற செவிலியர் இரண்டு பேரை அதிக மருந்துகள் கொடுத்து கொன்ற வழக்கில் கடந்த 2015ம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களாக பொலிசார் நடத்திய விசாரணையில் Niels H, 90 நோயாளிகளை அதிக மருந்துகள் கொடுத்து கொன்றுள்ளதாக பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், Niels H யுடன் சிறையிலிருந்த முன்னாள் கைதி, Niels H நோயாளிகளை கொன்றதற்கான காரணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், Niels H தான் செய்த செயல்களைப் பற்றி பெருமைப்பட வேண்டுமென்று விரும்பினார்.

பல நோயாளிகளுக்கு அதிக மருந்து கொடுத்து உயிரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார், ஆனால் அது விபரீதத்தில் முடிந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers