தந்தையே தமது 4 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடுமை: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
521Shares
521Shares
lankasrimarket.com

ஜேர்மனியை உலுக்கிய 4 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தில் கைதான நபர், பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என தெரிய வந்துள்ளது.

ஜேர்மனியில் பொலிசாரின் அதிரடி நடவடிக்கையை அடுத்து பொதுமக்களின் உதவியால் கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான Christian J.

குறித்த நபரின் தற்போதைய மனைவியின் குழந்தையே பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி. பொலிசாரின் சமயோசிதமான நடவடிக்கையின் பயனாகவே சிறுமியின் தாயாரிடம் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைக்கவும், அதனையடுத்து நேற்றைய தினம் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Lower Saxony பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் குழந்தைப் பருவம் முதற்கொண்டே Christian J அதே குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியின் தாயாருக்கும் Christian J மீது அளவுகடந்த பாசமும் நம்பிக்கையும் இருந்து வந்துள்ளது.

ஆனால் ஜேர்மனி முழுமையும் தமது மகளின் புகைப்படத்தை பொலிசார் விளம்பரம் செய்து உதவி கோரிய நடவடிக்கையால் தாம் சுக்கலாக உடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் துஷ்பிரயோக காணொளிகளை குறித்த நபர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த யூலை மாதம் வரை குறிப்பிட்ட பாலியல் இணையதளத்தில் பதிவெற்றம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பெயர் குறிப்பிடாத வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர், குறித்த காணொளியில் ஜேர்மன் மொழி பேசப்படுவதாக கண்டறிந்து ஜேர்மன் பொலிசாருக்கு தகவல் பாரிமாறியுள்ளார்.

ஆனல் குறித்த காணொளி காட்சிகளால் ஜேர்மன் பொலிசாருக்கு வழக்கு விசாரணையை முன்னெடுக்க முடியாமல் திணறினர். இதனையடுத்தே பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை நாடு முழுமையும் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் இருந்து உதவி கோரினர்.

புகைப்படம் வெளியான 12 மணி நேரத்தில், பாதிக்கப்பட்ட குழந்தையும் அதன் தாயாரும் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் சென்று, தமது காதலருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட Christian J தற்போது விசாரணையில் உள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்