கணவர் கண்முன்னால் மனைவி பாலியல் துஷ்பிரயோகம்!

Report Print Raju Raju in ஜேர்மனி
2021Shares
2021Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் உள்ள அகதிகள் முகாமில் கணவர் கண்முன்னால் அவர் மனைவியை கற்பழித்த அகதிக்கு 11 வருடங்கள் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவம் ஜேர்மனியின் Bonn நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. கானா நாட்டை சேர்ந்த Eric X (31) என்ற அகதி அங்குள்ள அகதிகள் முகாமிலிருந்த ஒரு கூடாரத்துக்கு உள்ளே சென்றுள்ளார்.

அங்கு 23 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் படுத்து தூங்கியுள்ளார். அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய Eric பெண்ணை அங்கிருந்து வெளியில் அழைத்து வந்து கணவர் கண் முன்னாலேயே கற்பழித்துள்ளார்.

மேலும், அவர்களிமிருந்து ஸ்பீக்கர் மற்றும் 6 யூரோக்களையும் திருடி சென்றுள்ளார். சம்பவத்தையடுத்து பொலிசார் Eric-ஐ கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

தற்போது நீதிமன்றம் Eric-குக்கு 11 வருடங்கள் ஆறு மாதங்கள் சிறை தண்டனையளித்து தீர்ப்பளித்துள்ளது.

இது ஒரு மிருகத்தனமான செயல் என வழக்கை விசாரித்த பொலிசார் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேர்மனிக்கு புகலிடம் கோரி வரும் பலர் பாலியல் வழக்குகளில் சந்தேக நபர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்