ஜேர்மனில் பெண்களுக்கு எதிரான வன்முறை: தாக்கத்தை ஏற்படுத்திய திட்டம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் அன்றாடம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளில் இருந்து காத்துக்கொள்வதற்காக "Violence Against Women” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரசாரம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற மினியேட்டர் வண்டர்லேண்ட் அருங்காட்சியகத்துடன் இணைந்து helpline உருவாக்கியுள்ளது.

பிரசாரத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள காட்சிகள், நகரின் முக்கிய இடங்களான மத்திய ரயில் நிலையம், Planten un Blomen பூங்கா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள town hall ஆகிய இடங்களில் காட்டப்படுகின்றன.

அதாவது, வன்முறை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வெளிப்படையாக உள்நாட்டு அமைப்பில் காட்டப்படுகிறது. ஆனால் மற்றவர்களின் பார்வைக்கு வன்முறையின் தாக்கம் குறைந்த அளவில் உணர்ந்துகொள்ளுமாறு உள்ளது.

இதுகுறித்து helpline தலைவர் Petra Söchting கூறியதாவது, தற்போது சிலர் பாலியல் துன்புறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை, அதனால் பாதிக்கப்பட்டர்களுக்கு இந்த அனுபவத்தை உணர்வது கடினமாக உள்ளது,

பெண்களுக்கு எதிரான பரந்த வன்முறைகள் இன்னும் எத்தனை உருவாகம் என்பது தெரியவில்லை. பிரச்சாரத்தின் மூலம் சமுதாயத்தின் விழிப்புணர்வை வளர்க்கவும் சமூகத்தை ஊக்கப்படுத்தவும் அதை சமாளிக்கவும் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்