பொலிசுக்கு ரகசிய தகவல் அளித்தவருக்கு தீவிரவாதியுடன் தொடர்பு: திடுக் தகவல்

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியின் பெர்லினில் கடந்தாண்டு நடந்த தீவிரவாத தாக்குதலின் போது 12 பேர் கொல்லப்பட்டனர், 56 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலில் குற்றவாளியாக அறியப்பட்ட Anis Amri என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவருக்கும், ஜேர்மன் பொலிசுக்கு ரகசிய தகவல் அளித்தவருக்கும் தொடர்பிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பயங்கரவாத செயல்களை தூண்டும் வண்ணம் அவர் செயல்பட்டதும், North Rhine-Westphalia பொலிஸ் படைக்கு தகவல் அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனியில் தாக்குதல் நடத்த நல்ல ஆண் வேண்டும், நம்பிக்கை இல்லாதவர்களை கொல்ல வேண்டும் என தகவல் கொடுப்பவர் கூறியதாக வழக்கறிஞரான Ali Aydin தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்