நாய்களுக்கான வரியாக 11 மில்லியன் யூரோ செலுத்திய ஜேர்மன் மக்கள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
111Shares
111Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் கடந்த ஆண்டில் மட்டும் செல்லப்பிராணிகளுக்கான வரியாக பெர்லின் மக்கள் 11 மில்லியன் யூரோ செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியில் மட்டும் செல்லப்பிராணிகளுக்கான வரி நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் பெர்லின் மக்கள் 11 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக ‘dog tax’ எனப்படும் வரி செலுத்தியுள்ளனர்.

மார்சானின் கிழக்கு மாவட்டத்தில் செல்லப்பிராணி உரிமையாளர்களிடம் இருந்து 1.1 மில்லியன் யூரோ வரியாக மாவட்ட நிர்வாகம் பெற்றுக்கொண்டுள்ளது.

மட்டுமின்றி Reinickendorf மற்றும் Spandau பகுதி மக்களும் மில்லியன் யூரோ அளவுக்கு வரி செலுத்தியுள்ளனர்.

Schöneberg பகுதி மக்கள் 287,000 யூரோ வரி செலுத்தியுள்ளனர். பெர்லினில் மட்டும் செல்லப்பிராணிகளுக்கான வரி விவகாரத்தில் பணியாற்ற 24 அதிகாரிகளை நிர்வாகம் நியமித்துள்ளது.

ஜேர்மனியில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் தங்கள் பிராணிகளை அரசிடம் பதிவு செய்து, தொடர்ந்து அதற்குண்டான வரியை செலுத்த வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

மட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்கள் வளர்ப்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும். 19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மன் மொழி பேசும் நாடுகளில் முதன் முறையாக இந்த ‘dog tax’ அறிமுகப்படுத்தப்பட்டது.

இது, செல்லபிராணிகளால் பரவும் நோய்களை தடுக்கும் பொருட்டே அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் இந்த ‘dog tax’ அறிமுகமானது. ஆனால் 1970களில் குறித்த வரி செலுத்தும் திட்டத்தை அரசே ரத்து செய்து உத்தரவிட்டன.

குறித்த சட்டத்தை முதன் முறையாக பிரித்தானியா ரத்து செய்தது மட்டுமின்றி 1987 ஆம் ஆண்டு புதிதாக சட்ட புத்தகம் ஒன்றையும் வெளியிட்டது.

ஆனால் ஜேர்மனி மட்டும் விடாப்பிடியாக தற்போதும் குறிப்பிட்ட தொகையை ‘dog tax’ என செல்லப்பிராணி உரிமையாளர்களிடம் இருந்து வசூலித்து வருகின்றது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்