எங்க தோட்டத்துல வெடிகுண்டு இருக்கு: பொலிசை அலறவைத்த முதியவர்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
170Shares
170Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் தன்னுடைய தோட்டத்தில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு இருப்பதாக முதியவர் பொலிசுக்கு தகவல் அளிக்க சிறிது நேரம் பரபரப்பானது.

தெற்கு ஜேர்மனியின் Betten பகுதியில் 81 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பொலிசுக்கு அவசர அழைப்பை விடுத்திருந்தார்.

தன்னுடைய தோட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது தான் மிகப்பெரிய Courgette என்பது தெரியவந்தது.

40 செ.மீ நீளம் கொண்ட Courgette-ன் எடை ஐந்து கிலோவாகும், யாரோ மர்ம நபர் ஒருவர் முதியவரின் தோட்டத்தில் வீசிவிட்டு போனதும் தெரியவந்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்