துருக்கி சிறையிலிருந்து ஜேர்மன் பிரஜை விடுதலை

Report Print Kabilan in ஜேர்மனி
93Shares
93Shares
lankasrimarket.com

துருக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜேர்மன் நாட்டு குடிமகனை அரசியல் காரணங்களுக்காக துருக்கி அரசு விடுதலை செய்ததாக பெர்லின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் வெளிநாட்டு தூதரகம் அந்த கைதி யார் என்று இன்னும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2016ம் ஆண்டு துருக்கி பிரதமர் Recep Tayyip Erdogan க்கு எதிராக நடந்த ஆட்சி கவிழ்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, ஏராளமான இரட்டை குடியுரிமை கொண்ட மக்கள் கைது செய்யப்பட்டனர்.

அதில் 9 பேர் ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஜேர்மனி மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஜேர்மனி அரசும் துருக்கி மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது, கடந்த வாரம் ஜேர்மனியின் மனித உரிமை ஆர்வலர் பீட்டர் ஸ்டீயூட்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மற்றொருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலையான நபரின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே அவரது விபரங்களை வெளியிடவில்லை என ஜேர்மன் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்