இந்தியாவிற்கு வந்த ஜேர்மனி சுற்றுலாப் பயணி: விசாரணையில் சிக்கிக் கொண்ட பரிதாபம்

Report Print Santhan in ஜேர்மனி
373Shares
373Shares
lankasrimarket.com

இந்தியாவிற்கு வந்த ஜேர்மனி சுற்றுலாப் பயணி ஒருவர், போலி விசா மூலம் வந்துள்ளதால், அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் சொன்பத்ரா இரயில் நிலையத்தில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அந்த சுற்றுலாப் பயணி, இது தொடர்பாக பொலிசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், தாக்கப்பட்ட நபரின் பெயர் ஹோல்கர் எரிக் மிஸ்ச் எனவும், இவர் ஜேர்மனியின் பெர்லினைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இந்தியாவிற்கு வந்த அவர் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்துள்ளார். அதன் பின் உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், கடந்த 3-ஆம் திகதி இரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவர் சோனபத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த அமன்குமார் என்ற இரயில்வே ஊழியரிடம் வழி கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் அமன்குமார் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

அதன் பின் பொலிசார் ஹோல்கர் எரிக் மிஸ்ச் சோதனை செய்த போது, அவரிடம் டூரிஸ்ட் விசா இல்லை, போலி விசாவை காட்டியே இந்தியா வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்