நாய் வளர்ப்புக்காக 1 மில்லியன் வரி செலுத்தும் ஜேர்மனியர்கள்

Report Print Kabilan in ஜேர்மனி
74Shares
74Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் ரேபிஸ் வெறி நாய் கடியை ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் நாய் வளர்ப்பவர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.

ஜேர்மனியின் பெர்லின் தலைநகரில் மட்டும் கடந்த ஆண்டு நாய் வளர்ப்பிற்கான வரியாக 11 மில்லியன் யூரோக்களை நாய் வைத்திருப்பவர்கள் செலுத்தியுள்ளனர்.

இதே போல பறவைகள் வளர்ப்பவர்களும் ஒரு மில்லியன் அளவில் வரியினை செலுத்தியுள்ளனர். தலைநகரில் நாய் வரி என்பது மிகப் பெரிய வணிகமாக இருப்பதால், பெர்லின் நகரில் மட்டும் 24 பணியாட்கள் முழுநேர வேலையாக இதில் ஈடுபட்டுள்ளனர்.

19ஆம் நூற்றாண்டில் ரேபிஸ் எனும் வெறிநாய் தொற்றினை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் நாய் வரியை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்தன.

ஆனால், 1987ஆம் ஆண்டில் சட்ட புத்தகத்திலிருந்து நாய் வரியை அகற்றியது. எனினும், ஜேர்மனி மட்டும் பிடிவாதமாக இந்த வரி செலுத்தும் சட்டத்தினை அமல்படுத்தி வருகிறது.

ஜேர்மனியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்றவாறு இந்த வரியில் மாறுபாடுகள் உள்ளன. 2015ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி Stiftung Warentest நகரில் நாய் வரியானது 186 யூரோக்கள் என்ற அளவில் உயர்ந்தது தெரிய வந்துள்ளது.

இந்த நாய் வரியானது நாய் இனங்களைப் பொறுத்து உயர்த்தப்படும். குறிப்பாக, மனிதர்களை தாக்கும் நாய்களுக்கு மிக அதிக வரி விதிக்கப்படும். ஆனால், நாய் வளர்ப்பவர்களுக்கு சில வரிவிலக்குகளும் உள்ளன.

அதாவது, கண்பார்வையற்றோர் வைத்திருக்கும் நாய், எதாவது சாதனை புரிந்து பதக்கங்களை பெற்ற நாய் மற்றும் நாய்க்கான மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்று, மனிதரிகளுக்கு இதனால் எந்தவித ஆபத்துகளும் நேராது என சான்றிதழ் பெற்ற நாய்களுக்கு வரிகள் கிடையாது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்