ஜேர்மனியில் உள்ள பகுதிகளிலேயே Schleswig-Holstein மாநிலம் தான் மிகவும் மகிழ்ச்சியான பகுதிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் ஆண்டுதோறும் மிகவும் மகிழ்ச்சியான மாநிலம் எது என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 1960களில் இருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக, கணக்கெடுப்பில் பங்குபெறுபவர்கள் குடும்பத்துடன் வாழும் சூழ்நிலைதான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்து வந்தனர்.
இவர்கள் ஜேர்மனியின் தெற்கு பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால், தற்போதைய கணக்கெடுப்பின்படி வடக்கு மாநிலங்களே மகிழ்ச்சியான பகுதிகள் என தெரிய வந்துள்ளது.
பொருளாதார நிபுணர் Brend Raffelhüschen நடத்திய ஆய்வில், ஜேர்மனியின் வடமேற்கு பகுதிகளின் எல்லையில் டென்மார்க் நாடு அமைந்துள்ளதே மகிழ்ச்சிக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
அந்த பகுதிகளில் நிலையான தன்மையை மக்கள் உணர்கின்றனர். அதனால் அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப அந்த பகுதி உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
முக்கியமாக வெற்றி, அன்பு மற்றும் சமூக உறவுகளின் மீதுள்ள மதிப்பு ஆகியவை அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும், தங்களின் வருமானத்தினை பொருட்படுத்தாமல், சிறு தொழில் என்றாலும் அதனை மனமாற செய்வதினாலேயே அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என அவர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.