மலைப்பாம்பை உள்ளாடையில் வைத்திருந்த வாலிபர் கைது

Report Print Peterson Peterson in ஜேர்மனி
244Shares
244Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் குட்டி மலைப்பாம்பை உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த வாலிபர் ஒருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Darmstadt நகர் பொலிசாருக்கு நேற்று முன் தினம் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

பொது இடத்தில் இரண்டு வாலிபர்கள் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

மது அருந்திருந்த இரண்டு பேரிடமும் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, வாலிபர்களில் ஒருவரின் உள்ளாடையின் அளவு பெரிதாக இருந்ததால் பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

நபரிடம் சோதனை செய்தபோது அவரது உள்ளாடையில் உயிருடன் ஒரு குட்டி மலைப்பாம்பு மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மலைப்பாம்பை உடனடியாக மீட்ட பொலிசார் அதனை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மலைப்பாம்பை மறைத்து கொண்டு சென்ற குற்றத்திற்காக வாலிபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாலிபர் மீது கூடுதலாக வழக்கு பதிவு செய்யப்படுமா என்பது குறித்து பொலிசார் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்