ஜேர்மன் தலைநகரில் தீவிரவாத தாக்குதல் முயற்சி? பொலிசார் அதிர்ச்சி தகவல்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
190Shares
190Shares
lankasrimarket.com

ஜேர்மன் தலைநகரான பெர்லினில் மர்ம நபர் ஒருவர் கூட்டத்தினர் மீது காரை செலுத்தி தாக்குதல் நடத்த முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தலைநகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் பொதுமக்கள் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர்.

அப்போது, மெர்சிடஸ் மொடல் கார் ஒன்று தூரத்தில் வந்துக்கொண்டு இருந்தது.

சாலையில் வந்துக்கொண்டு இருந்த கார் திடீரென நடைமேடையில் ஏறி பொதுமக்கள் மீது பாய முயன்றுள்ளது. ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் இதனை கண்டுக்கொண்ட பொதுமக்கள் லாவகமாக விலகி சென்றதால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

நடைமேடையை விட்டு விலகிய அந்த கார் நிற்காமல் பறந்து சென்றுள்ளது. காரின் பதிவு எண்ணை நபர் ஒருவர் கவனித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்த முயன்ற நபர் அந்த காரை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.

மேலும், அவர் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில் அவர் மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

இது தீவிரவாத தாக்குதலா அல்லது பிற பழிவாங்கும் செயலா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்