ஜேர்மனியில் சாலையில் வசிப்போர் எண்ணிக்கை அதிகளவில் உயர்வு: காரணம் என்ன?

Report Print Raju Raju in ஜேர்மனி
236Shares
236Shares
ibctamil.com

ஜேர்மனியில் வீடில்லாமல் சாலையில் வசிப்போரின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியின் வீடற்றவர்களுக்கு உதவும் கூட்டாட்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014-ல் சாலையில் வசிப்போரின் எண்ணிக்கை 39000-ஆக இருந்த நிலையில் 2016-ல் 52000-ஆக உயர்ந்துள்ளது.

சொந்த வீடு இல்லாமல் ஜேர்மனியில் இருந்தவர்களின் எண்ணிக்கை 2014-ல் 335,000-ஆக இருந்தது, இது கடந்தாண்டு 422,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த வீடு இல்லாதவர்கள் பெரும்பாலானோர் கூட்டு விடுதிகளில் தங்குகிறார்கள் அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் வசித்து வருகிறார்கள்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு அதிர்ச்சியளிப்பதாக VdK சமூக சங்கத்தின் தலைவர் உல்ரைக் மாஸ்செர் கூறியுள்ளார்.

ஆய்வை நடத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் தாமஸ் கூறுகையில், உயர்ந்து வரும் வீடு வாடகைகள் எதிர்மறை வளர்ச்சியையே உண்டாக்கும்.

கடந்த 1990-களிலிருந்து கவுன்சில் குடியிருப்புகள் 60 சதவிகிதம் குறைந்துவிட்டதாகவும், அதிக வீடுகள் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜேர்மன் சாலையில் வசிப்போரில் அதிகமானோர் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள் எனவும், ஆனால் குடியேற்றம் மட்டுமே அதிகம் பேர் வீடில்லாமல் இருக்க காரணம் என சொல்ல முடியாது எனவும் தாமஸ் கூறியுள்ளார்.

இதனிடையில், அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்