ஜேர்மனியில் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? முடிவுக்கு வருகிறதா மெர்க்கெல்லின் சகாப்தம்!

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து ஏஞ்சலா மெர்க்கெலின் இடைக்கால அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஜேர்மனியில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்டியன் சோஷலிஸ யூனியன் கட்சியும், சோஷலிஸ டெமோக்ராடிக் கட்சியும் கூட்டணி அமைத்தன.

இருப்பினும் 246 இடங்களையே கைப்பற்றியதால், பெரும்பான்மை கிடைக்கவில்லை, அதுமட்டுமின்றி சோஷலிஸ டெமோக்ராடிக் கட்சி இந்த 246 இடங்களில் 153 இடங்களை கைப்பற்றியிருந்தது.

இதனால் ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்டியன் சோஷலிஸ யூனியன் கட்சி அதை விட குறைவான இடங்களை கைப்பற்றியிருந்தால், அந்த அணியின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சோஷலிஸ டெமோக்ராடிக் கட்சி முடிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, ஆட்சியில் அமர மறுத்தது.

குறைவான இடங்களை கைப்பற்றியிருந்தாலும், சிறுபான்மை அரசு அமைவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என பல்வேறு கட்சிகள் அறிவித்தன.

இருந்த போதிலும் சிறுபான்மை அரசுக்குத் தலைமை தாங்க விரும்பவில்லை என்று ஏஞ்செலா மெர்க்கெல் கூறியதால், இடைக்கால அரசு அவர் தலைமையில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலில் மற்றொரு அணியினான எப்டிபி கட்சி 80 இடங்களை கைப்பற்றியிருந்தால், அந்த அணியுடன் புதிய கூட்டணி அமைக்க ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்டியன் சோஷலிஸ யூனியன் கட்சி முடிவு செய்தது, இதில் பசுமைக் கட்சியும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது.

சுமார் இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது, எப்டிபி கட்சி இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இனியும் தொடரப்போவதில்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில் ஏஎப்டி கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறுகையில், அரசு அமைக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம்.

தற்போதைய சூழலில் உருவாகும் கூட்டணி மோசமான ஆட்சியைத்தான் தரும், மோசமாக ஆள்வதைவிட ஆட்சி அதிகாரமே தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருப்பது ஏஞ்செலா மெர்க்கெலின் அகதிகள் கொள்கை எனவும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 10 லட்சத்துக்கும் அதிகமான அகதிகளுக்கு ஜேர்மனியில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஜேர்மனியில் கூடுதல் அகதிகளை ஏற்க பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தன்னிச்சையாக முடிவு செய்தார்.

இதுவே அவருக்கு முதல் அடி என்றும், அது தான் தேர்தலில் பிரதிபலித்தது என்றும் அவரது கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஜேர்மனி சான்சலராக உள்ளார் ஏஞ்சலா மெர்க்கெல். கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தால் மீண்டும் தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.

அப்படி தேர்தல் நடந்தால் ஏஞ்சலாவின் தலைமை கேள்விக்குறியாகும் எனவும் அவர் அரசியல் விட்டே விலகும் நிலைமை கூட வரலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்