வெடி விபத்தில் தரைமட்டமான வீடு: வீட்டில் இருந்த நால்வரின் கதி என்ன?

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் வீடு ஒன்று வெடித்து தரைமட்டமானதில் வீட்டில் இருந்த நால்வருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

மேற்கு ஜேர்மனியின் பெர்லினில் உள்ள ஸ்பாண்டு பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

நேற்றிரவு ஒன்பது மணியளவில் வீடு ஒன்று வெடித்து சிதறியதில் அதன் கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது.

சம்பவம் குறித்த அறிந்த தீயணைப்பு படையினர் வீட்டின் உள்ளே இருந்த 47 மற்றும் 40 வயதுடைய பெற்றோரையும், அவர்களின் 7 மற்றும் 5 வயதான மகன்களையும் மீட்டனர்.

இதில் ஐந்து வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

மற்ற மூவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வெடி விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மீடியா சில, வீட்டிலிருந்த எரிவாயு வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டது என கூறிவரும் நிலையில் பொலிசார் அதை இன்னும் உறுதி செய்யவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்