திருடனாக மாறிய ஜேர்மன் தொழிலதிபர் கைது

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியை சேர்ந்த தொழிலதிபர், தன் சக பயணிகளிடம் திருடிய குற்றத்திற்காக 16 மாதங்கள் சிறை தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனியின் Düsseldorf நகரை சேர்ந்த தொழிலதிபர் Bjorn Beil. 36 வயதான இவர் கடந்த செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 4 ஆகிய திகதிகளில் தொழில் முறை பயணமாக தலைநகர் பெர்லின் செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.

அப்போது பயணிகளின் உடைமைகள் பாதுகாக்கப்படும் அறைக்குச் சென்ற பெய்ல், அங்கிருந்த 20,000 பவுண்ட்ஸ் மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் CCTV காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் அக்டோபர் 23 அன்று தொழில்முறை பயணமாக லண்டன் செல்வதற்காக மீண்டும் விமான நிலையத்துக்கு வந்துள்ளார் பெய்ல்.

இவர், விமான நிலையத்தில் உள்ளதை உறுதி செய்துகொண்ட காவல் துறையினர் அவரை விமான நிலைய கழிப்பறையில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். அன்றும் அவர் பெட்டி ஒன்றை திருடியுள்ளார்.

பெய்லிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசியில் அவர் திருடிய பொருட்களின் புகைப்படங்கள் இருந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

குற்றங்கள் உறுதியானதையடுத்து பெய்லுக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் இதுகுறித்து விசாரணை அதிகாரி PC Barry Munnelly கூறியதாவது, பெய்ல் தனது தொழில்முறை பயணங்களை திருடுவதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களாக மாற்றிக்கொண்டு பயணிகளின் உடமைகளை கொள்ளையடித்துள்ளார்.

Met பொலிசார் மற்றும் Heathrow விமான நிலைய அதிகாரிகள் இணைந்து குற்றவாளி பெய்லை பிடித்ததாகவும், நீதிமன்றத்தில் நிறுத்தி சரியான தண்டனை வாங்கித் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடமைகளை திரும்ப வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers