பலரை கொல்வேன் என மிரட்டிய பல்கலைக்கழக மாணவன் கைது

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனி பல்கலைக்கழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் வைத்து அரை தானியங்கி ஆயுதங்கள் மூலம் மக்களை கொல்வேன் என மிரட்டல் விடுத்த மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ட்ரையர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 23 வயது மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தின் ஓன்லைன் போர்டல் மூலம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைகழக நிர்வாகிகள் கண்டுபிடித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மாணவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற பொலிசார் நேற்று அவரை கைது செய்தனர்.

மாணவரின் விரிவான திட்டங்களின் ஆதாரங்களை பொலிசார் அங்கு கைப்பற்றினார்கள், ஆனால் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர், தொடர்ந்து மாணவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழகத்தின் ஆடிட்டோரியமும், உணவகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்