ஒளி மாசடைதலால் மனிதர்களுக்கு அதிக பாதிப்பு: ஜேர்மன் விஞ்ஞானிகள் தகவல்

Report Print Givitharan Givitharan in ஜேர்மனி

இன்று உலக அளவில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் பயன்படுத்தி ஒளியூட்டுவது வெகுவாக அதிகரித்து வருகின்றது.

குறுகிய காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளினால் சூழல் ஒளியால் மாசடைதல் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனைச் சேர்ந்த குழு ஒன்று இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

இதற்காக நாசா நிறுவனம் செயற்கைக்கோள்களைக் கொண்டு எடுத்த பூமியின் சில புகைப்படங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஒவ்வொரு ஒக்டோபர் மாதங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆராய்ந்தபோது பூமியானது இரவு நேரங்களில் செயற்கை ஒளியூட்டலுக்கு உள்ளாவது 2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் அதிகளவு சக்தி வீண் விரயமாக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி சூழலில் உள்ள உயிரினங்களின் செயற்பாடுகளில் பாரிய மாற்றம் ஏற்படுகின்றது.

இம் மாற்றங்கள் இறுதியில் மனிதனையே பாதிப்புக்கு உள்ளாக்கும்.

தவிர மனிதர்களிலும் நேரடியாக உடல் உள பாதிப்புக்களை ஏற்படுத்தும் வல்லமை ஒளி மாசடைதலுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்