போலி செய்திகளை தடுக்கத் தவறிய பேஸ்புக்: சாடிய ஜேர்மனி உளவுப்பிரிவு

Report Print Arbin Arbin in ஜேர்மனி
65Shares
65Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் பேஸ்புக் உள்ளிட்ட பெரும் இணைய பக்கங்கள் போலி செய்திகள் பரவுவதை தடுக்க போதிய நடவடிக்கைள் எடுக்க தவறியதாக ஜேர்மன் உளவுப்பிரிவு தலைவர் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த பெரு நிறுவனங்கள் தகவலை பரிமாறிக்கொள்வது மட்டுமே தங்கள் கடைமை எனவும் ஆனால் சட்ட பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு சமூக பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர் எனவும் ஜேர்மனி உளவுப்பிரிவின் தலைவர் Hans-Georg Maassen தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் அரசியல் பிரிவினையை தூண்டும் வகையில் பேஸ்புக்கில் ரஷ்ய விளம்பரங்கள் பதிவேற்றப்பட்டிருந்ததை அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது முகிகியமானதாக பார்க்கப்படுவதாக Maassen இந்த விவகாரம் தொடர்பில் கூட்டப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக பன்மைத்தன்மை அதன் கோட்ப்பாடுகளை மெல்ல இழந்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைத்தன்மை மற்றும் சுய கருத்துகளுக்கும் இடையேயான வேறுபாடு தொலைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த யூன் மாதம் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் பதியப்படும் வெறுப்பூட்டும் பதிவுகளை ஒரு வாரத்துக்குள் நீக்காவிட்டால் 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் இரண்டு புதிய அலுவலகங்களை ஜேர்மனியில் திறந்து போலி செய்திகள் தொடர்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்