ஜேர்மனியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான கிறிஸ்துமஸ் மரம்: ஆச்சரிய வீடியோ

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் அடுத்த மாதம் 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜேர்மனியின் டார்ட்முண்ட் நகரில் தான் இம்மரமானது பிரம்மாண்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் உயரம் 147 அடியாகும்.

இதை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து செல்கிறார்கள். கிறிஸ்துமஸ் மரம் முழுவதும் கண்கவர் வண்ணத்திலான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது டார்ட்முண்ட் (Dortmund 2017) என மின்விளக்குகளாலேயே பதியப்பட்டுள்ளது.

மரத்தின் உச்சியில் ஏஞ்சல் போன்ற உருவம் மஞ்சள் விளக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மரத்தை சுற்றியுள்ள சாலை பகுதிகளில் சந்தை கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் களைக்கட்டி வரும் நிலையில், ஜேர்மனி மக்கள் தற்போதே பண்டிகையை கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்