சார்லி ஹெப்டோவின் ஜேர்மன் பதிப்பு நிறுத்தம்

Report Print Fathima Fathima in ஜேர்மனி

சர்ச்சைகளுக்கு பெயர் போன சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் ஜேர்மன் பதிப்பு நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை வெளியாகும் நாளிதழ் சார்லி ஹெப்டோ.

பல கேலிச்சித்திரங்கள், அறிக்கைகள் மற்றும் சமய நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்கள், நகைச்சுவை துணுக்குகள் இதில் இடம்பெறுகின்றன.

1970ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், 1981ல் மூடப்பட்டு, மீண்டும் 1992 முதல் வெளிவரத் தொடங்கியது.

இந்நிலையில் ஜேர்மன் வாசகர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஜேர்மன் பதிப்பு நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதமே முதல் ஜேர்மன் பதிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்