நாஜி பாட்டிக்கு சிறைத்தண்டனை

Report Print Fathima Fathima in ஜேர்மனி
117Shares
117Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நாஜி பாட்டி என்றழைக்கப்படும் 89 வயது மூதாட்டிக்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் ஐரோப்பிய யூதர்களை இனப்படுகொலை(Holocaust Denial) செய்தனர்.

இக்குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாஜி பாட்டி என்றழைக்கப்படும் Ursula Haverbeck-க்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது இவரும், இவருடைய கணவரும் நாஜிப் படையில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

கடந்த 2016ம் Detmold நகர மேயருக்கு, Auschwitz வதைமுகாம் தொடர்பாக கடிதம் எழுதினார்.

Holocaust Denial என்ற ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை என தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்த பாட்டி, வலது சாரிகளுக்கு ஆதரவாக கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டின் போது நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு "Only the truth will set you free" என்ற வாசகம் கொண்ட நோட்டீஸை வழங்கினார்.

இதனையடுத்து கூடுதலாக 10 மாதங்கள் சேர்த்து 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கிய நிலையில், தற்போது 14 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் கடைசியாக மேல்முறையீடு செய்ய தலைமை பிராந்திய நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக Haverbeck-ன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்