காட்டு பன்றியை துப்பாக்கியால் சுட முயன்ற நபர்: நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in ஜேர்மனி
479Shares
479Shares
lankasrimarket.com

காட்டு பன்றியை துப்பாக்கியால் வேட்டையாட நபர் ஒருவர் முயன்ற நிலையில் அது தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனியின் கிரீப்ஸ்வால்ட் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 50 வயதான நபர் அங்குள்ள பகுதிகளில் உள்ள காட்டு பன்றிகளை துப்பாக்கியால் வேட்டையாடியபடி இருந்தார்.

அப்போது தனது அருகில் வந்த ஒரு பன்றியை சுட முயலும் போது பன்றியானது அவரை தாக்கியது.

இதில் அவரின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகிலிருந்த தண்ணீரில் விழுந்துள்ளார்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.

இறந்த நபர் குறித்த விபரங்கள் இன்னும் தெரியாத நிலையில், அவரை தாக்கிய காட்டு பன்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற விபரமும் தெரியவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.

ஜேர்மனியில் ஆண்டுக்கு 500,000 காட்டு பன்றிகள் கொல்லப்படுகிறது, ஆனாலும் அதன் எண்ணிக்கை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்