அகதிகளை நாடு கடத்த எதிர்ப்பா? உண்மையை விளக்கிய விமான நிறுவனம்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
192Shares

அகதிகளை நாடு கடத்தும் ஜேர்மனி அரசின் உத்தரவை எதிர்த்து விமானிகள் குரல் கொடுத்ததாக வந்த செய்திகளுக்கு விமான நிறுவனம் உரிய விளக்கத்தை அளித்துள்ளனர்.

ஜேர்மனியில் அகதிகள் தொடர்ந்து அதிக அளவில் தஞ்சமடைந்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் மேர்க்கல் அரசு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி செல்லும்படி அறிவுறித்தியிருந்தது.

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு கலவரங்கள் முடிவுக்கு வராத நிலையில் அகதிகளை திருப்பி அனுப்புவது அவர்களுக்கு ஆபத்து என்கிற குரல் நாடு முழுவதும் எழுந்ததது.

இதனையடுத்து 222 பயணிகளை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Lufthansa விமானத்தின் விமானிகள் அவர்களை அழைத்துச் செல்ல மறுத்ததாக தகவல்கள் வெளியானது.

இது ஜேர்மனி அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டதாக பலர் பாராட்டும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த செய்திகள் அடிப்படை ஆதாரம் அற்றதென Lufthansa நிறுவனம் மறுத்துள்ளது.

ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்படும் நபர்களை தனியாக சந்தித்து அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்ட பின்னரே விமானத்தில் ஏற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒருவேளை அவர்கள் தாய்நாடு செல்ல மறுக்கும்பட்சத்தில், குறித்த நபரை விமானத்தில் ஏற்ற விமானிகள் மறுத்துள்ளனர்.

சக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே விமானிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும், அகதிகள் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப செல்வதில் எந்த ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.

ஜேர்மனியின் மற்ற விமான நிலையங்களில் இருந்து 16,700 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தாலும், இந்த 222 அகதிகள் நாடு கடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்