முழு கிராமத்தையே ஏலத்தில் வாங்கிய நபர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் ஏலத்தில் விடப்பட்ட ஆல்வின் என்ற முழு கிராமத்தை 140,000 யூரோவுக்கு நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

கிழக்கு ஜேர்மனியில் அமைந்துள்ள இந்த ஆல்வின் கிராமத்தில் ஆளில்லாத குடியிருப்புகளும் வயதான 20 நபர்களும் மட்டுமே உள்ளனர்.

கடந்த ஞாயிறன்று குறித்த முழு கிராமத்தையே ஏலத்தில் விடுவதாக விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் முதல் விலையாக 125,000 யூரோ என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொலைபேசி வாயிலாக ஏலம் எடுத்த நபர் ஒருவர் இறுதி விலையாக 140,000 யூரோ என முடித்துள்ளார்.

ஆல்வின் கிராமத்தின் உரிமையாளர்களான இரு சகோதரர்களுக்கு இந்த கிராமத்தை பாதுகாக்க முடியாமல் போனதாலையே தற்போது ஏலத்தில் விட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின் போது இளைஞர்களுக்கு ஆல்வின் கிராமத்தில் ஹிட்லர் பயிற்சி அளித்துள்ளதாகவும், இதன் சுற்றுவட்டாரத்தில் போர் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers