ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை அருகே சிக்கிய துப்பாக்கி குண்டுகள்: மக்கள் பீதியில்

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தை அருகே 200 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கிருந்த மக்கள் பீதியில் உள்ளனர்.

சமீபகாலமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் தின நாட்களில் நிச்சயம் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

இதனால் இந்த நாடுகளில் பொலிசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியின் Berlin கிறிஸ்துமஸ் சந்தை அருகே கடந்த ஞாயிறு மாலை ஒரு பையில் 200 துப்பாக்கி குண்டுகள் கொண்ட பையை கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் பொலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், அங்கிருந்த நபர் சந்தேகத்திற்குரிய அடிப்படையில் ஒரு பொருள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் அங்கு விரைந்த பொலிசார் அதை சோதனை மேற்கொண்ட போது, அதில் 200 வெடிக்கும் குண்டுகள் மற்றும் 7.65 காலிபர் வெடிமருந்துகள் போன்றவை இருந்துள்ளன.

இவை அனைத்தும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்துள்ளன.

இதைத் தொடர்ந்து அந்த பெட்டியை தடவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார், அதில் யாருடைய கை ரேகை இருக்கிறது என்பது குறித்து சோதனை மேற்கொள்ளவுள்ளனர்.

அதுமட்டுமின்றி பொலிசார் மோப்ப நாய்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டு வருவதாகவும், தீவிரவாதிகளின் செயலாக கூட இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இது தீவிரவாதிகளின் சதியாக இருக்காது என்று கூறியுள்ளனர்.

அதே விடயம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெட்டி, கார் பார்கிங்கின் கீழ் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதன் அருகே மசூதியும் இருந்துள்ளது, இதனால் பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...