ஓடும் ரயிலில் பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர்: பொலிசார் நடவடிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
147Shares

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் இளம்பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி அவரை இருக்கையில் இருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய 78 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெர்லினில் U6 லைன் சுரங்கரயிலில் இளம்பெண் ஒருவரிடம் குறித்த நபர் மிகவும் நிர்பந்தமாக அவரது இருக்கையை கேட்டுள்ளார்.

ஆனால் குறித்த இளம்பெண் தனது இருக்கையை விட்டுத்தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டியுள்ளார்.

இருப்பினும் குறித்த இளம்பெண் அவருக்கு தமது இருக்கையை விட்டுத்தர மறுத்துள்ளார். இதனிடையே சகபயணிகள் குறித்த நபர் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தரவும், மின்னல் வேகத்தில் சம்பவ பகுதிக்கு வந்து அந்த துப்பாக்கி நபரை கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது பொது இடத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டுதல், சட்டத்தை மீறுதல், பொலிஸ் அதிகாரி என பொய் கூறுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்