நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற நபர்கள்: விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்த பொலிசார்

Report Print Santhan in ஜேர்மனி
340Shares
340Shares
ibctamil.com

ஜேர்மனியில் நாட்டை விட்டு தப்பிக்க முயன்று துருக்கி செல்ல முற்பட்ட ஆண் மற்றும் பெண்ணை பொலிசார் விமானநிலையத்தில் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் Berlin பகுதியில் உள்ள Wedding என்ற இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 55 வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அதன் பின் பொலிசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போது, அப்பெண் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் ஆண் மற்றும் பெண் துருக்கிக்கு தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதை அறிந்த பெர்லின் பொலிசார் அவர்களை பெர்லின் விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டவர்களில் ஆணின் வயது 36 இருக்கும் எனவும், பெண்ணின் வயது 27 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் ஆண் ஏற்கனவே போதை பொருள் வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்