பெர்லின் சுரங்க ரயில் நிலையத்தில் தாக்குதல்: இஸ்லாமியவாத பின்னணி கொண்டதா?

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
119Shares
119Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் சுரங்க ரயில் நிலையத்தில் கட்டுப்பாடற்று கத்தியால் தாக்குதல் நிகழ்த்திய சிரிய நாட்டைச் சேர்ந்தவர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டிற்கு முந்தைய இரவு தென்மேற்கு பெர்லினில் உள்ள Bayerischer Platz ரயில் நிலையத்தில் 23 வயதுடைய Ahmad Al-H என்று நபர் கத்தித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

50 வயதுடைய ஒருவரிடம் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்டுவிட்டு “துரோகி”என்று கூறியபடி கத்தியால் குத்தியதாக Tagesspiegel நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தாயும் அவருடைய குழந்தையும் தாக்கப்பட்ட நிலையில் எவ்வித சேதமுமின்றி தப்பினர்.

இதனைதொடர்ந்து அவசர அழைப்புகளுக்கிணங்க விரைந்து சென்ற அதிகாரிகள், Ahmad Al-Hவை கைது செய்தனர்.

அப்போதும் கடும் அமளியில் ஈடுபட்ட அந்த நபர் ”கட்டுப்பாடற்ற நிலையில்” காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக Ahmad Al-Hவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொலிசார், மனநலம் குறித்து பரிசோதித்தனர்.

மேலும், தங்களால் தகவல்களை உறுதிசெய்யவோ மறுக்கவோ இயலவில்லை, இச்சம்பவத்தில் இஸ்லாமியவாதப் பின்னணி உள்ளதா இல்லையா என்பதை விசாரித்துக் கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையானது, அரசியல் நோக்கம் கொண்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்