ஜேர்மனியில் அதிகரித்த வேலைவாய்ப்புகள்: காரணம் இது தான்

Report Print Raju Raju in ஜேர்மனி
262Shares
262Shares
ibctamil.com

ஜேர்மனியில் பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளதால் வேலையில் இருப்போர் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை நாட்டின் பெடரல் தொழிலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஜேர்மனியில் 183,000 பேர் வேலையில்லாமல் இருந்துள்ளனர். இது கடந்தாண்டு எண்ணிக்கையை விட குறைவாகும்.

கடந்தாண்டு நாட்டில் 44.3 மில்லியன் பேர் வேலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது புதிய சாதனையாகும், சதவீத அடிப்படையில் 5.3-ஆக உள்ளது.

இது குறித்து அலுவலகத்தின் தலைவர் டெட்லெப் கூறுகையில், புதிய ஊழியர்களை சேர்க்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வலுவான ஏற்றுமதிகளால் தான் இது சாத்தியமாகியுள்ளது என கூறியுள்ளார்.

கடந்த 1990-க்கு பிறகு இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வேலையில் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்