விலங்குகளுக்கு உணவாகும் கிறிஸ்துமஸ் மரங்கள்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
145Shares
145Shares
ibctamil.com

கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரிப்பதற்காக வெட்டப்பட்ட பைன் மரங்களைத் தவிர மீதமுள்ளவை என்னவாகும்? என்று யோசித்தது உண்டா

அவை உணவாகின்றன, இங்கல்ல - ஜேர்மன் வன விலங்குப் பூங்கா ஒன்றில்,

Stuttgartஇலுள்ளது Wilhelma உயிரியல் பூங்கா, கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரிப்பதற்காக வெட்டப்பட்டவை போக மீதமூள்ள சுமார் 150 பைன் மரங்கள் இங்குள்ள யானைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் உணவாக அளிக்கப்படுகின்றன. சில மரங்கள் பூங்காவை அலங்கரிப்பதற்குப் பயன்படுகின்றன.

இதுகுறித்து வன விலங்கு பூங்கா அலுவலர் கூறுகையில், இந்த மரங்களில் அலங்கார விளக்குகளோ ஜிகினா தோரணங்களோ தொங்கவில்லை, ஆனால் அவை யானைகளுக்கு நல்ல நொறுக்குத் தீனியாக உள்ளன.

இவை ஒன்றும் பெரிய மரங்கள் இல்லை, என்றாலும் யானைகள் அவற்றை விரும்பி உண்ணுகின்றன, பைன் மரத்தின் கிளைகளை உடைத்து உண்ணுவது யானைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் உள்ளது.

மற்ற மாமிச உண்ணிகளுக்கும் இம்மரத்தின் வாசனை மிகவும் பிடித்திருக்கிறது, சாப்பிட்டது போக மீதமுள்ள மரங்கள் பறவை சரணாலயங்களை அலங்கரிப்பதற்கு பயன்படுகின்றன என்று கூறியுள்ளார்.

ஜேர்மனியின் பெர்லின் போன்ற மற்ற இடங்களில் உள்ள வன விலங்குப் பூங்காக்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிந்தைய இதே மரபு பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்