துப்பாக்கியுடன் விமான நிலையத்தில் பிடிபட்ட பாட்டி

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

ஜேர்மனியில் குண்டு நிரம்பிய துப்பாக்கியுடன் பயணம் செய்ய காத்திருந்த பாட்டி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

பெர்லினிலிருந்து Stuttgart செல்லவிருந்த பாட்டி டெலிகல் விமானநிலையத்தில் ஃபெடரல் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவர் தனதுகைப்பையில் குண்டு நிரப்பிய துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தது தெரியவந்தது.

இறந்துபோன தனது கணவரின் குடும்பச்சொத்தான அத்துப்பாக்கியை Stuttgartஇல்வசிக்கும் அவரது வாரிசான மகளிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்வதாக அவர்பொலிசாரிடம் தெரிவித்ததாக Berliner Kurier செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விசாரணையில், அந்தத் துப்பாக்கி ஜேர்மனியில் பதிவு செய்யப்படாததால், நாட்டின் ஆயுதச் சட்டங்களை மீறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கியைப் பறிமுதல் செய்த பொலிசார் அவரைப் பயணம் செய்ய அனுமதித்தனர் என்றாலும், நாட்டின் துப்பாக்கி விதிகளை மீறியதற்காக அவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்