ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இளைஞர் மீது புகார்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
101Shares
101Shares
ibctamil.com

ஜேர்மனியில் தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ள 12 வயதுச் சிறுவனைத் தூண்டியதாக ஆஸ்திரிய இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவை சேர்ந்த சிறுவன் Lorenz.k, 16 வயதாக இருக்கும் போது கொள்ளை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைச்சாலையில் இருந்த போது மூளைச்சலவை செய்யப்பட்டான்.

இதனை தொடர்ந்து Ludwigshafen பகுதியிலுள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் வெடிகுண்டு வைக்க ஈராக் பெற்றோருக்குப் பிறந்த 12 வயது சிறுவனுடன் சேர்ந்து திட்டமிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தையில் வெடிகுண்டு வைப்பதற்கு வாட்ஸ் ஆப் மூலமாக கற்பித்தது மற்றும் தூண்டியது உட்பட தீவிரவாதம் தொடர்பான பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன என்று ஆஸ்திரிய பத்திரிகை ஏஜன்சியான APA ஞாயிறன்று செய்தி வெளியிட்டது.

2016ஆம் ஆண்டு அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் Ludwigshafen பகுதியில் வைத்த குண்டுவெடிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அந்தச் சிறுவன் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்படும் வயதை அடையாததால், மாகாணத்தின் சிறுவர்களுக்கான சிறப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்