ஜேர்மன் தலைநகரில் இருமடங்கான ரயில் பயணிகளின் எண்ணிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
179Shares
179Shares
ibctamil.com

ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கும் மூனிச் நகருக்கும் இடையேயான ரயில் பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் பெர்லினுக்கும் மூனிச் நகருக்கும் இடையே புதிய அதிவேக ரயில் சேவை துவங்கிய பின்னர் பிரச்னைகள் எழுந்த போதிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிட்டுகையில் சேவை துவங்கப்பட்ட முதல் நான்கு வாரங்களில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மட்டுமின்றி கடந்த ஆண்டில் மட்டும் 1.8 மில்லியனாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 3.6 மில்லியனாக உயர வாய்ப்பு உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெர்லின் - மூனிச் அதிவேக ரயில் பாதையில் சில கோளாறுகள் இருந்ததால் பல ரயில்களும் உரிய நேரத்துக்கு வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால் குறித்த பிரச்னைகள் சீர் செய்யப்பட்டு தற்போது 90 விழுக்காடு ரயில்களும் நேரம் தவறாமல் வந்து சேர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்