ஜேர்மனியில் EU Blue Card கொண்ட வெளிநாட்டவர்கள்: இந்த நாட்டவரே முதலிடம்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
364Shares
364Shares
ibctamil.com

ஜேர்மனியில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களில் இந்தியர்களே அதிகம் என தெரியவந்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் அல்லாத மற்ற நாடுகளை சேர்ந்த தகுதிவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு EU Blue Card வழங்கப்படுகிறது.

இந்த கார்டுடன் ஜேர்மனியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள Rheinische Post (RP), ஜேர்மனியில் பணிபுரியும் நான்கில் ஒருவர் (22.8 சதவீதம்) EU Blue Card-டுடன் இருக்கின்றனர்.

இவர்களில் இந்தியாவைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே அதிகம் என தெரிவித்துள்ளது.

மேலும் 2017ம் ஆண்டில் முதல் பாதியில் 11,023 EU Blue Card வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

EU Blue Card-யை பெற வேண்டுமானால்,

  • வருட சம்பளம் குறைந்தது €49,600 ஆக இருத்தல் வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணிதம், தகவல் தொழில்நுட்பம், இயற்கை அறிவியல், மருத்துவம் அல்லது பொறியியல் போன்ற துறையை சேர்ந்தவர்களுக்கு, குறைந்தது € 38,888 சம்பளமாக இருக்க வேண்டும்.

EU Blue Card வழங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், இதனை நீட்டித்துக் கொள்ளலாம்.

EU Blue Card பெற்ற ஒருவர் ஜேர்மனியில் 33 மாதங்கள் பணிபுரிந்திருந்தால் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும், B1 ஜேர்மனிய மொழி சான்றிதழுடன் கூடிய நபருக்கு 21 மாதங்கள் பணிபுரிந்தாலே போதுமானது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்