அழகை காட்டி பல ஆண்களிடம் கோடிக்கணக்கில் ஏமாற்றிய பெண்

Report Print Raju Raju in ஜேர்மனி
1454Shares
1454Shares
lankasrimarket.com

மேட்ரிமோனியல் தகவல் மையம் மூலம் திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய மோசடி பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர்.

இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

அவரும் வருங்கால மனைவி தானே கேட்கிறார் என பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சுருதி பாலமுருகன் தொடர்பிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை பாலமுருகன் உணர்ந்தார்.

இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் சுருதி, வாடகை தாய் சித்ரா, தந்தை எனப்படும் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே பாணியில் பல ஆண்களை சுருதி ஏமாற்றியுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு ஆண்டுக்கு முன்னர் நாமக்கல், நாகப்பட்டினம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்