ஜேர்மனியில் கருப்பினத்தவர்கள் மீதான இனவெறி தாக்குதல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
350Shares
350Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் கருப்பினத்தவர்கள் அனுதினமும் தங்கள் தோலின் நிறத்தின் அடிப்படையிலும் மன ரீதியிலும் இனவெறி தாக்குதலுக்கு ஆளாவதாக தெரிவிக்கிறார் Saraya Gomis.

ஜேர்மன் தாய்க்கும் கருப்பினத் தந்தைக்கும் பிறந்தவர் Saraya Gomis, பெர்லின் கல்வித்துறைக்கான anti-Discrimination கமிஷனராகவும், இனவெறிக்கு எதிரான தன்னார்வலராகவும் இருக்கிறார்.

தனது அரேபிய, துருக்கிய மற்றும் கருப்பின நண்பர்களுடன் Operaவுக்கு செல்லும்போது அங்கு திடீரென்று ஒரு அமைதி நிலவும். “அந்த அமைதியை நீங்கள் சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

இனம், ஊனம் அல்லது பாலினம் தொடர்பான இனவெறித்தாக்குதல்களுக்குள்ளாகும் மாணவர்களும், பெற்றோரும் சில சமயங்களில் ஆசிரியர்களும்கூட Saraya Gomisஐப் பார்க்க வரும்போது அவர்களது கஷ்டம் அவருக்கு நன்றாகப் புரிகிறது. அவரும் தினந்தோறும் அவ்விதத் தாக்குதல்களைக் கடந்து வருபவர்தானே.

ஜேர்மனி குடிமகளாக இருந்தாலும், பேக்கரியில் அவரை பார்ப்பவர்கள் நீ எந்த ஊர் என்று கேட்கிறார்கள், மாநாடுகளில் கலந்துகொள்ளும்போது சரியான ஜேர்மன் மொழியில் பேசினாலும் அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார்கள், சுரங்கப் பாதையில் பயணிக்கும்போது ஒரு பெண் அனுமதியின்றி அவரது சுருள் சுருளான தலைமுடியைப் பிடித்துப்பார்க்கிறார்.

பல கருப்பின ஜேர்மனி மக்கள், தாங்கள் ஜேர்மனிக் குடிமக்களாக நடத்தப்படாததாக உணர்கிறார்கள்.

Berlin ஒன்றும் எல்லோரும் நினைப்பது போல் Cosmopolitan நகரம் இல்லை என்று கூறும் Saraya Gomis, பல ஹோட்டல்களில் அனுமதி மறுக்கப்படும் நீங்கள், ஜேர்மனி நாட்டின் பெரும்பாலான பகுதிகள் உங்களுடையவை அல்ல என்பதை உணர்வீர்கள் என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்