சோப்பு போட்டு மலைப்பாம்பை குளிக்கவைக்கும் இளம்பெண்: வைரலாகும் வீடியோ

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

ஜேர்மனியில் பெரிய மலைப்பாம்பு ஒன்றை செல்லபிராணி போல் கொஞ்சி இளம்பெண் குளிக்கவைப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் பெரிய மலைப்பாம்பினை எந்த சலனமும் இல்லாமல் செல்ல பிராணி போன்று குளியலறைக்கு இழுத்து செல்கிறார்.

அங்குள்ள சோப்பு நீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இழுத்து விடுகிறார், மிகவும் நீளமான பாம்பு என்பதால் பாம்பு உடலின் சில பகுதி குளியல்தொட்டிக்குள் முழுவதும் செல்லவில்லை.

அந்நேரம் இளம்பெண் செல்லமாக பாம்பை தள்ளிவிட்டு முழுவதும் நீரில் மூழ்கும்படி செய்து குளிக்கவைக்கிறார் .

இரண்டு நிமிடம் மட்டுமே நீடிக்கும் இந்த வீடியோவில், மலைப்பாம்பிடமே சென்று அதன் மேல் துர்நாற்றம் வருவதாக கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வீடியோவில் பேசும் அந்த பெண் மலைபாம்பின் உணவுமுறையை மாற்றுவது பற்றியும் பாம்பு பெரிதாக இருப்பதால் அதற்கு ஏற்றாற்போல் குளியல்தொட்டியும் பெரிதாக மாற்றி அமைக்கபோவதாக கூறுவதும் விந்தையாக இருந்தது.

அந்த பெண் பாம்பை குளிக்கவைத்த பின் பாம்பின் தலையை லேசாக தடவியபடி அந்தபெண் இருக்கும் போது வீடியோ முடிவடைகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்