கொலைகாரனுக்கு துப்பாக்கி விற்றவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

முனிச் நகரில் 2016ஆம் ஆண்டு David Sonboly என்னும் 18 வயது இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கடைசியில் அவன் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.

அவனுக்கு துப்பாக்கி விற்றதாக கைது செய்யப்பட்டுள்ள 33 வயதுள்ள Philipp Korber, என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது கொலை, காயப்படுத்துதல் மற்றும் சட்ட விரோதமாக ஆயுதங்களைக் கையாளுதல் முதலான 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி Frank Zimmer, ”சந்தேகமின்றி இவன் ஒரு தீவிரவாதி, ஹிட்லரின் ஆதரவாளன், இவனை நிச்சயமாக இன வெறியன் என்று கூறலாம்” என்று தெரிவித்தார்.

Philipp Korber மற்றும் David Sonboly இருவரும் Darknet என்று அழைக்கப்படும் ரகசிய இணையதளங்கள் மூலம் சந்தித்துக் கொண்டனர். இத்தகைய இணையதளங்கள் கண்டுபிடிக்க இயலாதவை என்று கருதப்படும் நிலையில் அதே இணையதளங்கள் மூலமாகவே பொலிசார் Philipp korberஐப் பிடித்தனர்.

பிடிபட்ட Philipp Korber நடந்தவற்றுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்