ஜேர்மன் தாயாருக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
267Shares

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததை விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து ஜேர்மன் பெண்மணிக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த பெண்மணி ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததுடன் குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டியதாகவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால் சாகும் வரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈராக்கின் மோசூல் நகரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின்போது ராணுவத்தினரால் கடந்த ஆண்டு குறித்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டு ஈராக் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டும் முதல் வெளிநாட்டவர் இவர்.

இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்மணி தமது இரு மகள்களுடன் ஐ.எஸ் இயக்கத்தில் இணைய ஜேர்மனியில் இருந்து சிரியாவுக்கு விமானம் மூலம் வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இவருடன் ரஷ்ய நாட்டவர் ஒருவருக்கும் ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும், ஜேர்மானியரான 16 வயது லிண்டா வின்ஸல் என்பவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என அவரது பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்