அகதிகள் கடத்தலா? ஜேர்மன் பொலிசார் தேடுதல் வேட்டை

Report Print Fathima Fathima in ஜேர்மனி

சர்வதேச அகதி கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் குறித்து ஜேர்மன் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

இவர்களில் அதிகளவானவர்களை சர்வதேச அகதி கடத்தல் கும்பல் சட்டவிரோத முறையில் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜேர்மன் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய பொலிசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், Berlin, Saxony, Bremen மற்றும் North Rhine-Westphalia ஆகிய நகரங்களில் நேற்று பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர், சந்தேகத்தின் பேரில் பெர்லினில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், போலந்து எல்லைக்கு அருகே உள்ள நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச அகதி கடத்தல் கும்பல் தொடர்பில் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், சமீபகாலத்தில் லொறி மூலம் 160 அகதிகளை கடத்திவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அகதியையும் ஜேர்மனிக்குள் கடத்துவதற்காக 8000 யூரோ வரை பணம் பெறுவது தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்