வாகன புகை பரிசோதனைக்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவம்: பொறுப்பேற்ற கார் நிறுவனம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பலரது கோபத்தை சம்பாதித்த வாகன புகை பரிசோதனைக்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு Volkswagen கார் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு செய்தியில் 2014 ஆம் ஆண்டு காற்றுப் புகாத ஒரு அறையில் 10 குரங்குகளை அடைத்து வைத்து பல கார்களிலிருந்து வெளியேறிய புகையை செலுத்தி பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இன்னொரு ஆராய்ச்சியில் 19 ஆண்களும் 6 பெண்களும் டீசல் புகையை சுவாசிக்கும்படி செய்யப்பட்டதாக Stuttgarter Zeitung பத்திரிகையும் SWR வானொலியும் தெரிவித்தன.

மேற்கு ஜேர்மனியிலுள்ள Aachen ஆய்வகத்தில் நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் ஒரு மாதத்தில் பல்வேறு அளவில் நச்சுத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு கொண்ட டீசல் புகையை அவர்கள் சுவாசிக்கும்படி செய்யப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

இந்தப் பரிசோதனைகளையெல்லாம் Volkswagen, Daimler மற்றும் BMW ஆகிய கார் தயாரிப்பாளர்கள் நிதி உதவி செய்யும் அமைப்பான EUGT நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Volkswagenஇன் chief executiveஆன Matthias Mueller இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்றதோடு வருத்தமும் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைகள் தவறானவை, நியாயத்திற்குப் புறம்பானவை மற்றும் அருவருக்கத்தக்கவை என்று அவர் கூறினார்.

இது நடந்திருக்கக்கூடாது, இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் அவர் கூறினார்.

இந்த பரிசோதனை நடக்கவுள்ளதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஒப்புக்கொண்டுள்ள Volkswagenஇன் chief lobbyistஆன Thomas Steg சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு Volkswagen, வாகனம் வெளியிடும் புகையில் நச்சுப்பொருட்களின் அளவைக் குறைத்துக் காட்டும் கருவிகளைப் பயன்படுத்தி ஏமாற்றியது அனைவரும் அறிந்ததே.

இந்த விடயம் Volkswagenக்கு 30 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் Volkswagenஇன் முன்னாள் executiveஆன Oliver Schmidt, Volkswagen நிறுவனம் தூய காற்று விதிகளை மீற உதவினதை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு 400,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers