இஸ்ரேலை எச்சரிக்கும் ஜேர்மன் அமைச்சர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
247Shares
247Shares
ibctamil.com

இஸ்ரேல் மீது ஐரோப்பாவில் கடும் அதிருப்தி நிலவுவதாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Sigmar Gabriel தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனிய முரண்பாடுகளுக்கிடையே, தீர்வு குறித்த எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் இஸ்ரேல் மீது ஐரோப்பாவில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் Donald Trump, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அவரது நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாகவும், தங்கள் தூதரகத்தை அங்கு மாற்றவிருப்பதாகவும் அறிவித்ததை கடந்த வாரம் இஸ்ரேலுக்கு வருகை புரிந்த அமெரிக்க துணை அதிபர் Mike Pence வரவேற்ற நிலையில் Gabriel அதற்கு மாறுபட்ட வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதே, இது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இனி அது ஒரு நடுநிலையாளராக செயல்பட முடியுமா? மற்றவர்களும் இந்த முன்மாதிரியைப் பின்பற்ற மாட்டார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதவித்தொகைகள் நிறுத்தப்படலாம் என்ற மெல்லிய அச்சத்தில் இஸ்ரேல் கேபினட் உறுப்பினர்கள் வெளிப்படையாகவே தீர்வை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அதுதானே இஸ்ரேல் பாலஸ்தீனிய சமாதானத்திற்கும் ஜேர்மனி மற்றும் ஐரோப்பா அளிக்கும் பெரிய நிதி உதவிக்கும் அடிப்படை? என்று கேள்வி எழுப்பினார்.

இத்தகைய விடயங்கள் நிச்சயம் ஐரோப்பியர்களின் பார்வையில் படாமல் போகவில்லை என்று கூறிய அவர், இதனால் ஐரோப்பாவில் இஸ்ரேலின் செயல்கள் மீது கடும் அதிருப்தி வளர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்புத் தோன்றியதாக கூறியுள்ள Sigmar Gabriel, ஏன் இன்னும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்பதை கட்சியினருக்கு விளக்குவது தன்னைப் போன்றவர்களுக்கு மிகவும் கடினமாகி வருவதாகவும் தெரிவித்தார்.

ஜேர்மனி தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது, ஆனால், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டுக்கும் ஜெருசலேம் தலைநகராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்