ஜேர்மனியில் சடலமாக மீட்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்

Report Print Athavan in ஜேர்மனி
105Shares
105Shares
ibctamil.com

ஜேர்மனியில் ரயில் நிலையத்திற்கு அருகே அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Arizona மாகாணத்தை சேர்ந்த Nicholas(34) எனும் ராணுவ அதிகாரி ஜேர்மனியின் Parsberg ரயில் நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுகிழமை இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இவர் சரக்கு ரயிலில் அடிபட்டு தூக்கிவீசப்பட்டிருக்கலாம் என விசாரனை அதிகாரிகள் தெரிவித்தனர், இதை தவிர வேறு எந்த விவரங்களையும் வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Nicholas அமெரிக்க ராணுவத்தில் 2003ஆம் ஆண்டில் சேர்ந்துள்ளார், Fort Rile-ல் உள்ள கவச பிரிகேடு போர் அணியின் 1 வது படைப்பிரிவினருடன் இருந்தார். உக்ரேனில் ரஷ்யாவின் செயல்பாடுகளை கண்கானிக்கும் நேட்டோ பிரிவில் 9 மாதங்கள் பணி இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க கமாண்டர் Lt. Col. Peter Moon நிக்கோலஸின் மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு, அவரது குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்