ஜேர்மனியில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் “முனிச்”

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக முனிச் நகரம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து புள்ளிவிவரங்களை வழங்கும் அமைப்பான Inrix நடத்திய ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜேர்மனியின் 73 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், முனிச் நகர வாகன ஓட்டிகள் 51 மணி நேரம் டிராஃபிக் ஜாமில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது. இது 2016 ஆம் ஆண்டைவிட 4 மணி நேரம் அதிகம் ஆகும்.

முனிச் நகரில் நடைபெற்றுவரும் கட்டிட வேலைகளே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு இந்த போக்குவரத்து நெரிசல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 80 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது, ஒரு வாகன ஓட்டிக்கு சுமார் 1770 யூரோக்கள்.

ஜேர்மனியில் வேறெங்கும் விட சாலைகளில்தான் மக்கள் அதிக நேரத்தை வீணாக்குகிறார்கள்.

இது வியாபாரம், வர்த்தகர்கள் மற்றும் பொருட்களை டெலிவரி செய்தலின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜேர்மனியில் ஆய்வு செய்த அதே அமைப்பு உலகத்திலுள்ள 38 நாடுகளின் 1360 நகரங்களிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதன்படி அமெரிக்காவிலுள்ள Los Angeles அதிகபட்சமாக 102 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிடுவது தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்