வாரத்திற்கு 28 மணிநேரம்: ஜேர்மனியில் Metal தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Athavan in ஜேர்மனி
207Shares
207Shares
ibctamil.com

ஜேர்மனியில் Metal தொழிற்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இனிமேல் வாரத்திற்கு 28 மணிநேரம் உழைத்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பாவின் மிகப்பெரிய யூனியனான IG Metall-க்கும், முதலாளிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்மூலம் 2.3 மில்லியன் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டு ஊதியமும் உயர்த்தப்படும் என எனும் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர் ஒருவர், முதல் இரண்டு வருடங்களுக்கு வாரத்திற்கு 28 மணிநேரம் பணியாற்றலாம்.

அவர்களை கட்டாயப்படுத்தி அதிக நேரம் பணிபுரிய செய்ய நிறுவனங்களுக்கு அனுமதியில்லை, இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் வழமையான வாரத்திற்கு 35 மணிநேர பணிக்கு திரும்ப வேண்டும்.

ஆயினும் இந்த புதிய ஒப்பந்த முறையை தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள கிட்டதட்ட 700 நிறுவனங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, இது அங்கு சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை மற்றும் உடல் நலன் காரணமாக குறைந்த நேரம் வேலை செய்து அதற்கு தகுந்த ஊதியம் பெறவும், வாரத்துக்கு 40 மணிநேரம் மேல் வேலை செய்து அதிகம் ஊதியம் பெறவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

மொத்தத்தில் அனைவருக்கும் இந்த புதிய ஒப்பந்தமுறை ஒரே மாதிரி தரநிலையில் இருப்பதாக Megan Greene எனும் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய ஒப்பந்த முறையிலான வேலை நேரங்களை வழங்குவதாக Benz நிறுவனர் டைம்லர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜேர்மனியில் 138,000 மக்களை வேலைக்கு வைத்துள்ள Bosch, அதன் ஜேர்மனிய தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பழைய முறைப்படி சம்பளம் மற்றும் வேலை நேரங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்