4 வயது சிறுவனுக்காக 3300 மணிநேரம் அதிகம் பணிபுரிந்த ஊழியர்கள்: நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Kabilan in ஜேர்மனி
166Shares
166Shares
ibctamil.com

ஜேர்மனியில் சகபணியாளர் ஒருவரின் மகன் Leukaemia நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் விடுப்பு எடுக்க மற்ற பணியாளர்கள் தங்களின் விருப்பத்தின் பெயரில், 3300 மணிநேரம் கூடுதலாக வேலை பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Hesse நகரில் உள்ள Design நிறுவனத்தில் பணிபுரிபவர் Andreas Graff, இவரின் நான்கு வயது மகன் Julius Leukaemia நோயால் பாதிக்கப்பட்டிருந்தான்.

இந்த விடயம் தெரிந்த Graff, உடனடியாக தனது மகனை மருத்துவமனையில் சேர்த்தார், மேலும் விடுமுறைக்கான விடுப்பை எடுக்க நினைத்துள்ளார்.

ஆனால், மகனைப் பார்த்துக் கொள்ள நீண்ட நாள் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும் என அவர் கவலையடைந்துள்ளார்.

Graff-யின் நிலையை அறிந்த நிர்வாகத்தின் மேலாளர், நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 700க்கும் மேற்பட்டோரிடம், கூடுதலாக பணிபுரிவதற்கான ஒப்பந்த படிவங்களில் கையெழுத்திட வேண்டி கோரிக்கை விடுத்தார்.

உடனடியாக நிறுவனத்தில் பணிபுரிந்த Trainess உட்பட, அனைவரும் ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்மூலம், அவர்கள் அனைவரும் மொத்தமாக 3,264.5 மணிநேரம் கூடுதலாக பணிபுரிய வேண்டும். இந்த பணியாளர்களில் பலர், Graff-யை சந்தித்தது கூட இல்லை.

இதனை அறிந்த Graff, தனக்காக இத்தகைய பெரும் ஆதரவு இல்லாமல் போயிருந்தால், தான் தனது வேலையை இழந்திருக்கக் கூடும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனது மகனுக்காக ஓர் ஆண்டு காலம் விடுப்பு எடுக்க நினைத்தார் Graff. ஆனால், 9 மாதங்களிலேயே Julius-யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அவன் மருத்துவமனையில் வீட்டிற்கு திரும்பினான்.

தனது மகன் பூரணமாக குணமடைந்து விட்டால் அவனை பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும், அதன் பின்னர் தான் படிப்படியாக வேலையில் ஈடுபட இருப்பதாகவும் Graff தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்