நெடுஞ்சாலையில் பள்ளம்: ஜேர்மனியில் சுற்றுலா தொழில் பாதிப்படையலாம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
220Shares
220Shares
ibctamil.com

வடகிழக்கு ஜேர்மனியிலுள்ள பிரதான நெடுஞ்சாலை ஒன்று இடிந்து விழுந்ததால் அது முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

அதை சரி செய்வதற்கு குறைந்தது 2021ஆம் ஆண்டு வரை ஆகலாம் என்பதால் சுற்றுலாத்துறைக்கு பலத்த இழப்பு நேரிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

வட ஜேர்மனியிலுள்ள Mecklenburg-Western Pomerania மாகாணத்திலுள்ள Tribsees மாநகராட்சிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 20இல் ஏற்பட்ட பள்ளம் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

மாகாண தலை நகரமான Schwerinஇன் போக்குவரத்து அமைச்சகம், இதை உறுதி செய்துள்ளது. 49 மீட்டர்கள் சுற்றளவாக இருந்த அந்தப் பள்ளம் நான்கு மாதங்களில் 95 மீட்டர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் சில வாரங்களுக்குப் பிறகு மொத்தப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

சாலைக் கட்டுமானப் பணி நிபுணர்கள், வரும் இலையுதிர் காலத்தில் சாலையின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

சாலையின் அஸ்திவாரம் அதைத் தாங்கும் அளவிற்கு உறுதியில்லாமல் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது, என்றாலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

சாலைக் கட்டுமானப் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Mecklenburg-Western Pomerania பகுதியிலுள்ள சுற்றுலா நிறுவனங்கள், சாலை மூடப்பட்டுள்ளதால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என மிகுந்த வருத்தமடைந்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்